ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!

Monday, September 1st, 2025


…….
ஆப்கானிஸ்தானின் –  இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  35 பேர் காயமடைந்துள்ளதாகவும்  அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
000

Related posts: