ஆண்டின் முதல் அரையாண்டில் 252 மனித படுகொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Monday, July 23rd, 2018
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 252 மனித படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகள், தகாத உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழிவாங்குதல், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் 452 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் 3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 1503 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 1732 பெண் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!
கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை - பெட்ரோலிய கூட்ட...
|
|
|


