ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் – ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவிப்பு!

Saturday, August 14th, 2021

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அஞ்சல் முகவரிகள் மூலம் அடையாள அட்டைகள் அணைப்பிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பொதுப் பரீட்சை, நேர்முகப்பரீட்சை மற்றும் கடவுச்சீட்டு போன்ற அவசர தேவைகளுக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள info@drp.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது ஏற்கனவெ வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தா...
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசிய...