ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பத்தவறின் 2019 இல் பாரிய சிக்கல் –  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

Saturday, December 1st, 2018

வடக்கில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பத்தவறின் அடுத்த வருடம் பெரும் சிக்கல் ஏற்படும். இது பற்றி வடக்கு ஆளுநருக்குத் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளார் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.ண

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரிய பற்றாக்குறை, ஆசிரியர்களின் இடமாற்றம், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் இடமாற்றம், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் நியமனம், வெற்றிடமாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புதிய நியமனம், சீர்செய்யப்பட வேண்டிய ஆசிரிய ஆளணி பற்றி ஆசிரிய பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் ஏற்படவுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. தமிழ் பாடத்துக்கு (99) வெற்றிடங்களும், கணிதம் (188), விஞ்ஞானம் (161), ஆங்கிலம் (94) ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களை உடன் நிரப்பாதவிடத்து 2019 இல் நெருக்கடி ஏற்படும் என்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் முன்வைத்தது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

Related posts:


சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு ப...
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்...
தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது - அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் - மைத்தி...