ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!
Tuesday, November 1st, 2022
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ள சகலருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற முடியாத பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது, குறித்த இடத்துக்கு அமைச்சர் பிரவேசித்திருந்தார்.
சகலரும் பரீட்சைக்கு தோற்றும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இதன்போது அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எனவே ஆசிரியர்கள் அதற்காக தயாராகுமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்?
கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் - 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ...
|
|
|


