ஆசிரியர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
Tuesday, September 11th, 2018
ஆசிரியர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பாடவிதானங்கள் அமையவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வியினால் அதிகளவிலான கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் உருவாக்கி வரும் இந்த நாட்டில், மாணவர்கள் தமது வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான அறிவினைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக மிக மோசமான நிலைமையே காணப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் மிக மோசமான அனுபவங்களை தடுத்தல் தொடர்பாக கல்விமான்கள் முன்னோடிகளாக செயற்பட வேண்டும்.
பெற்றோர்களைப் போன்று ஆசிரியர்களும் இந்த விடயத்தில் கவனத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம் - பரீட்சைகள் திணைக்களம்!
சுகாதார சேவை, மருத்துவக் கல்வியில் இலங்கை பெருமை கொள்கிறது - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த முயற்சியில் உள்ளது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்க...
|
|
|


