ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு – மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Tuesday, May 18th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுகாதார பாதுகாப்புடன் மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தடுப்பூசி செலுத்துவதில், மேல் மாகாண ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் எவ்வாறிருப்பினும் ஏனைய மாகாணங்களிலும் இதேபோன்ற நடைமுறையை விரைவில் தொடரும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்திய வங்கியின் கீழ் வருகின்றது சமுர்த்தி வங்கி !
உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக விளங்குகின்றது தைப்பொங்கல் – வாழ்...
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


