ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Wednesday, September 8th, 2021
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர் அதிபர்களின் வேதன முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில் சிக்கல் உள்ளது.
இதனால் அடுத்த பாதீட்டின் மூலம் அவர்களது வேதன முரண்பாட்டினை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்திருந்தார்.
மேலும் பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியரகளின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக ,மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்..
அத்துடன் 2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டை முழுமையாக தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பிட்ட வகையில் இவை நடை முறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


