ஆசிரியர்களுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிக்க முடியாது – கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
Saturday, November 19th, 2016
பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்களிடமிருந்து நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட இருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிதி சேகரிப்பதன் மூலம் இலவசக் கல்விக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பாடசாலைக்குள் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து பாரத்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய, நக்காவத்தை மஹிந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts:
கொக்குவிலில் முச்சக்கரவண்டி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வரக் கட்டுப்பாடு!
நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது - இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எ...
|
|
|


