ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் – பங்களாதேஷ் மத்திய வங்கி அறிவுறுத்து!

ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஷின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது.
2022,அக்டோபர் 14, முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும், வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்படடுள்ளார்கள்.
ஆசிய கிளியரிங் யூனியன் என்பது ஒரு ஏற்பாடாகும், இதன் மூலம் பங்கேற்கும் நாடுகள் உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி கட்டணங்களை தீர்த்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்!
சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு நடவடிக்கை -விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்...
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...
|
|