ஆசியாவின் நுழைவாயில் இலங்கை – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

நட்புறவான வர்த்தக கொள்கை காரணமாக இலங்கை ஆசியாவின் நுழைவு வாயிலாக மாறியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சுகாதார சேவை, ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட உற்பத்திகள் மற்றும் சுற்றுலா கைத்தொழில் ஆகிய துறைகளில் அதிகளவான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் கருணாநாயக்க, அமெரிக்க வர்த்தக சபையில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
Related posts:
இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!
அத்தியாவசிய பொருட்களின் சிலவற்றின் விலைகள் குறைப்பு!
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி மரணம் - அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில்...
|
|