ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
Friday, August 14th, 2020
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்நிலையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது..
இதற்கிடையில் ஜனாதிபதி நேற்று மேலும் பல வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது மற்றும் காமினி செனரத்தை பிரதமரின் செயலாளராக நியமிப்பது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் புதிய செயலாளர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
கல்வி அமைச்சர் தலைமையில் தரம் 1இல் மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ வைபவம்!
மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்த...
|
|
|


