ஆகஸ்ட் 2 முதல் உயர்தர பரீட்சைக் கருத்தரங்குகளுக்கு தடை!
Thursday, July 20th, 2017
ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியினுள் முன்னோடி பரீட்சை வினாத்தாள் வழங்குதல் மற்றும் மேலதிக வகுப்புக்கள் நடத்துதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களம் மேற்படி தடைகளை விதித்துள்ளது.இந்த தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related posts:
முறைப்பாடு செய்ய வருகிறது புதிய நடைமுறை!
செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவி...
அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை - இ...
|
|
|


