ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

கொரோனாவைரஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே குறைவடையும் என மருத்துவர் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதுவருடத்தின் போது உருவான கொத்தணி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை நீடிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தோன்றிய கொத்தணி டிசம்பர் மாதமளவிலேயே குறைவடைந்தது என தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத் எனினும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட காலங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பரவுகை மார்ச்வரை நீடித்தது என தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத் புத்தாண்டு கொத்தணி குறைவடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் எசலபெரஹர போன்றவற்றில் கலந்துகொண்டு சுதந்திரமாக வெளியில் நடமாடினால் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|