அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Wednesday, May 1st, 2024

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே அஸ்வெசும கொடுப்பனவிற்கு பொருத்தமான சரியாக தகவல்களை மாத்திரம் பதிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: