அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
Friday, March 22nd, 2024
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அஸ்வசுமா திட்டத்தில் பயன்பெறும் மக்கள் தற்போது 16 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளதுடன் அடையாள அட்டை இல்லாமை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பிரச்சனைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!
ஒரே நேரத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல் - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
610 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத் திறனாளிகளும் துணுக்காயில்!
|
|
|


