அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் – உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.
அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மே ஏழாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
பிரசர் கருவிகள் பற்றாக்குறை: சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுபீட்ச சுட்டெண்ணில் வீழ்ச்சி!
கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் கோரிக்க...
|
|
பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டம் - பல்கலை...
சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகள் - கல்...
இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - எச்சரிக்கை விடுத்துள்ளார் விளாடிமிர் ப...