அவசியமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022

எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதுடன், அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும், எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் சபையில் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, எரிபொருள் போக்குவரத்து சேவையில் இருந்து இன்றுமுதல் தாம் விலகுவதாக எரிபொருள் தாங்கி ஊர்திகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

அரசாங்க ஊழியர்களுக்கு மேலும் ஒரு சம்பள உயர்வு - பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர்!
இரு தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் : பெப்ரவரி முதலாம் திகதி வாக்களிக்க முடியும் -கிளிநொச்சி மாவ...
புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்க...