அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெறுபவர்களே ஆர்ப்பாட்டத்தில் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

வாகன வசதி, எல்லையற்ற எரிபொருள் கோட்டா என சிறப்புச் சலுகைகளை அனுபவித்த பலரே பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது – கடந்த காலங்களில் அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெற்றிருந்த பலரே,கூட்டுத்தாபன தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோலிய களஞ்சிய முனையத்தில் தொழிற்சங்க தலைவர்கள் சிலருக்கு நிறுவன வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன.
பெற்றோலியக்கூட்டுத்தாபன களஞ்சிய முனையத்தின் தொழிற்சங்க தலைவர்களுக்கு அந் நிறுவனம் இவ்வாறு நான்கு உத்தியோகபூர்வ வாகனங்களையும் வழங்கியிருந்தது. கடந்த மாதத்தில் அவர்களுக்கு அந்த வாகனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டருந்தது.
இவ்வாறு, பல்வேறு வரப்பிரசாதங்களுடன் எல்லையற்ற எரிபொருள் கோட்டாவும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.இப்போதுதான், இதுபற்றி தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|