அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!

Tuesday, April 2nd, 2019

அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இந்த நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற உள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றில் இருந்து 79 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 79 விண்ணப்பங்களில் இருவர் அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: