அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!
Tuesday, August 21st, 2018
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்க வல்லது விளையாட்டுத்துறை. அந்தவகையில் எமது இளைஞர்களை மனிதநேயம் மிக்க சிறந்த நற்பிரைஜைகளாக உருவாக்க எமது கட்சி கடுமையாக உழைத்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் வலிகாமம் பிரதேச சபை உறுப்பினரமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட போட்டித் தொடரை பிரதம அதிதியாக கலந்தகொண்டு ஆரம்பித்து வைத்தபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது இளைஞர்களை ஆற்றல், அனுபவம், அக்கறை கொண்ட வினைத்திறன் மிக்கவர்களாக உருவாக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்காக கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு நலத்திட்டங்களூடாக விளையாட்டுத் துறையை ஊக்கவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.இதை யாரும் மறந்தவிட முடியாது.
தற்போது எம்மிடம் அவ்வாறான அரசியல் பலம் காணப்படாத போதிலும் இருக்கின்ற அரசியல் பலத்தை கொண்டு எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்து வருவதுடன் கிடைக்கக் கூடிய வழிவகைகளை கண்டறிந்து அதனூடாகவும் மக்களது தேவைப்பாடுகளை நிறைவு செய்து வருகின்றோம் என்றார்.



Related posts:
|
|
|


