அரிசி இறக்குமதிக்கு பிரதமர் உத்தரவு!
Saturday, December 9th, 2017
ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நிதி இராஜாங்கஅமைச்சர் இரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்தைக்குப் பின்னர் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இருக்க கூடாது எனபிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரிசியின் விலையை சந்தைகளில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரிசியை பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இவ்வாறு செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
சிங்கள அரசோடு இணைந்து செயலாற்றியவர்களென எங்களைச் சுட்டுவிரல் நீட்டியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிர...
வட்டுக்கோட்டைக்கு 40வயது பூர்த்தி!
காணாமல் போனோர் அலுவலகம் : ஐ.நா. பாராட்டு!
|
|
|


