அரிசியின் விலைகளைக் குறைக்க தீர்மானம்!
Monday, April 1st, 2019
சம்பா மற்றும் நாட்டரிசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக, அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள வகையில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் காலத்தில் தற்போது காணப்படும் அரிசிக்கான விலை மேலும் குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!
நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை - 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!
அமைச்சின் முன் அனுமதியின்றி எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்த முடியாது - அமைச்சர் கஞ்சன பணிப்பு!
|
|
|


