அரிசிக் களஞ்சியசாலைகள் பரிசோதனை!
Tuesday, February 14th, 2017
அரிசிக்கான விலை நிர்ணயத்தை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவக்கூடிய அரிசி தட்டுப்பாட்டை இல்லாது செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு ள்ளது. அரசாங்கத்தினால் அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்ப டக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரிசி களஞ்சியப்படுத்தும் அனைத்து இடங்களையும் சோதனையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இதனிடையே நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் சுற்றிவளை ப்புகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடமாகாணத்தின் புதிய சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!
வெதுப்பக உற்பத்திக்கு பாதிப்பு!
தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சா...
|
|
|
திங்கள்முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிரத சேவைகள் ஆரம்பம் - நாளைமுதல் முற்பதிவுகளை மேற்...
அரிசி - சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன த...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு - எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் - நாடாளும...


