அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!

அரச வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றையதினம்(28) சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த சொய்சா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்!
அதிபர் - ஆசிரியர்கள் சுகயீன போராட்டம்!
மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுங்கள் - மன்னார் மாவட்ட ...
|
|