அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு!

எட்கா உடன்படிக்கை மற்றும் சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்தியசாலைகளில் நாளை(17) நாடளாவிய ரீதியில்வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் காலை 8.00 மணி முதல் மறுநாள் (18) காலை 8.00 மணி வரை நடைபெறும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரிதஅலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு இணங்காதுவிடின் நாடளாவிய தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்வைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணி...
இரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு...
|
|