அரச பணியாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கும் சம்பளமில்லாத விடுமுறையைப் பெறமுடியும் என அறிவிப்பு!
Friday, September 16th, 2022
அரச பணியாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கும் சம்பளமில்லாத விடுமுறையைப் பெற முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகாண் காலத்திலும் பணியாளர்கள் அல்லாத சேவைகளில் உள்ள அரச அதிகாரிகள் மாத்திரமே இவ்வாறு விடுப்பு எடுக்க முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதியம் இன்றி விடுமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள், அரசுப் பணியில் இருந்து விலகுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் அரசுப் பணியில் இருந்து விலக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


