அரச நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடன் !

அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபை 3174 கோடி ரூபாவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 38255 கோடி ரூபாவும், இலங்கை துறைமுக அதிகார சபை 23765 கோடி ரூபாவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 4226 கோடி ரூபாவும், வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமான சேவை கம்பனி 3852 கோடி ரூபாவும், ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனி 9158 கோடி ரூபாவும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிரிய நியமனங்கள் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்க பின்னடிக்கும் பட்டதாரிகள்!
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!
|
|