அரச நிறுவனங்கள் – பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அவதானம்!
Friday, June 17th, 2022
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமைமுதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இன்றையதினம் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.
இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிக்கலின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


