அரச நிறுவனங்களின் செலவுகள் குறைப்பு – சுற்றறிக்கையை அவளியிட்டது நிதி அமைச்சு!
Thursday, February 2nd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொடர் ஒதுக்கீட்டை 6 சதவீதத்தால் குறைக்க நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!
அடையாள அட்டைகளை பெற புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாத 39 பேர் கைது - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|
|


