அரச தொழில் அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்படாமையினால் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் இன்று (02) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் தீர்வு கிட்டாததனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிப...
உயர்தரக் கல்வியில் புதிதாக உள்வாங்கப்படும் பாடங்கள் !
ஊழியர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தகவல் திணைக்களம் தெரி...
|
|