அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் ஆதரவளிக்க மாட்டோம் – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு!
Wednesday, May 4th, 2022
அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் தமது அணியினர் ஆதரவளிக்க மாட்டார்கள் என ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எந்த அர்த்தமும் இல்லாத யோசனை எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்கார செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடப்பட்ட பின்னர், கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டுக்கு இணையான கருத்தையே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீன் ஏற்றுமதிக்கு 15சதவீத வரிச்சலுகை!
அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் - போக்குவரத்து முகாமைத்துவ அமை...
சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுகின்றது - வடக்கு ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு!
|
|
|


