அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் – பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, September 13th, 2022
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக, ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும் சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.
அதேபோல், ஆட்சேர்ப்பின்போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையின் விளைவாக அரச சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து, அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு, பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


