அரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சொந்த வீடுகள்!
Thursday, January 4th, 2018
அரச சேவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சொந்த வீடுகள் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் “நிலசெவன” வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய வருடத்திற்கான அரச சேவைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தால் கடந்த 3 வருடமாக 14 இலட்சம் அரச பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க முடிந்தது.
இந்த வருடத்தில் ஊழல் மோசடியற்ற அரச பணியாளர்களை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு - EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
ஐநாவின் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!
|
|
|


