அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை – அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தகவல்!
Thursday, April 15th, 2021
அரச சார்பற்ற 38 அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ராஜா குணரத்ன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், இந்த விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்களில், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் அடங்குவதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை!
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்...
அமெரிக்கத் தூதுவர் - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
|
|
|


