அரச ஊழியர்களுக்கு கைவிரல் அடையாளம் கட்டாயம் – வெளியானது சுற்றறிக்கை !

Monday, May 15th, 2023

இன்று திங்கள்கிழமைமுதல் அரச ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பது மற்றும் வெளியேறிச் செல்லும் போது கைவிரல் அடையாளம் கட்டாயம் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க சேவையை வழமை போன்று கொண்டு நடாத்துதல் தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டீ.என். ரஞ்சித் அசோகவினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கொவிட்-19 தொற்று பரவுவதை தடுக்கும் வககயில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்ககள உள்ளடக்கி 02/2021(V) எனும் சுற்றறிக்கையின் அடிப்படையில், 07ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்கும் போது அது தொடர்பான கையேட்டை மாத்திரம் பயன்படுத்துவது மாத்திரம் போதுமானது எனும் குறித்த ஏற்பாடு இதன் மூலம் இடைநிறுத்தப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: