அரச ஊழியர்களுக்கான புதிய கட்டுப்பாடு அமுல்!
 Tuesday, July 4th, 2017
        
                    Tuesday, July 4th, 2017
            
அரச ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறும் நேரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய கை ரேகை இயந்திரம் பயன்படுத்தும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு அமைய புதிய நடவடிக்கை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்திலான சுற்றறிக்கை இலக்கம் 03/2017 மற்றும் 2017.04.19 திகதியிலான கடிதத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களு...
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரத...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவிப்பு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        