அரச ஊழியர்களின் பணிகள் இவ்வார இறுதிவரை தொடரும் – பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, May 12th, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதிவரை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்டதுடன் இந்த காலப்பகுதியில் மக்கள் செயற்படும் முறை தொடர்பில் ஆராயந்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், களுத்துறை மற்றும் புத்தளம் உட்பட 23 மாவட்டங்களுக்கு 11 ஆம் திகதிமுதல் தளர்த்தப்பட்டது.
அத்துடன் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்பும் நடவடிக்கைகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் இந்த வார இறுதி வரை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மக்களின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
Related posts:
|
|
|


