அரச ஊழியர்களது வருடாந்த கொடுப்பனவில் மாற்றம்!
Tuesday, December 12th, 2017
அனைத்து அரச ஊழியர்களதும் வருடாந்த கொடுப்பனவை கூடிய தொகையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் வரவு மற்றும் செயல்திறன்களை அடிப்படையாக கொண்டே இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட குறித்த இந்த யோசனை விவாதத்துக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு இதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையினால் அரச துறை சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களும் நன்மை அடைவார்கள் என அமைச்சு அறிவித்துள்ளது
Related posts:
புதிய வாகனங்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு!
மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு!
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது - இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட...
|
|
|


