அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு – பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவு செலுத்தப்பட மாட்டாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருடிய நகையினை விற்க முற்பட்ட நபரை பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்த நகைக் கடை உரிமையாளர்: யாழில் சம்பவ...
கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடத்த தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ - இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தீர்மானம் - இராஜாங்க அம...
|
|