அரசியல் பழிவாங்கல் பரிந்துரைகளை அமுல்படுத்தும் யோசனை – நாடாளுமன்றில் 21 ஆம் திகதி முன்வைப்பு!
Thursday, April 15th, 2021
2015 ஜனவரி 8 ஆம் திகதிமுதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவால் எதிர்வரும் 21 ஆம் திகதி மேற்படி யோசனை சபையில் முன்வைக்கப்படும் எனத் தெரியவருகின்றது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்பதாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சதீவில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!
உயிர் அச்சுறுத்தல் - முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா பதவி விலகல்!
|
|
|


