அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு!
Friday, October 20th, 2023
அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் இன்று பீஜிங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பிராந்திய விவகாரங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரச்சினைகள் பலவற்றில் இருந்து மீண்டௌ முடிந்துள்ளது - அமைச்சர் மங்கள சமரவீர!
சீரற்ற காலநிலை - நிறைவுறுத்தப்படவுள்ள எரிபொருட்களை வெளியேற்றும் நடவடிக்கை!
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார் கோட்டாப...
|
|
|


