அரசியல் குழப்பம் – பலாலி விமான நிலைய புதுப்பித்தல் தாமதம்!

Tuesday, January 8th, 2019

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகளை இந்திய அரசாங்கம் பிற்போட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இடையில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகள் காரணமாக இந்த திட்டம் தற்போது பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய விமானசேவைகள் அதிகாரசபை, பலாலி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts:

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகர...
நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் ...
எதிர்காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் - சமு...