அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு – சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!
Tuesday, February 27th, 2024
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவின கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
சென்சோ இயந்திரத்துக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்!
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்த வேண்டும் - தேசிய அமைப்புகளின் சம்...
நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை -வடக...
|
|
|


