அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை – கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020

அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரச்சரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் நிலைமையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு சென்டிமீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொது மக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் வெற்றியை மாத்திரம் கவனத்தில் கொண்டுச் செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பின்போது மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்”எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: