அரசியல் கட்சிகளின் தடைக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Monday, August 1st, 2016

இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாதென்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கறிஞர் பிரசன்னா லால் டி அல்விஸ் தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ,பொதுபல சேனா அமைப்பு உட்பட இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள 27 அரசியல் கட்சிகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி காரணமாக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த மனுமுலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவ்வாறான கட்சிகளை தடைசெய்யும் படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரச தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அதனை தள்ளுப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். எதிர் தரப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Related posts: