அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன – சுமந்திரன் குற்றச்சாட்டு!
Sunday, January 7th, 2018
அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள். அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை. ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேயே இந்தளவு விடயங்களை சாதிக்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஊடகங்களும் பொய்யை சொல்கின்றன. நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.
Related posts:
|
|
|


