அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
Saturday, February 5th, 2022
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிங்கள நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைய கைதிகளை விடுதலை செய்வது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முடிசூடியது இலங்கை!
புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!
கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சு!
|
|
|


