அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க் கட்சிகளிடம் வலியுறுத்து!
Wednesday, November 23rd, 2022
அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதமர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கென்னடியை மேற்கோள்காட்டி இதனை தெரிவித்துள்ளார்.
நாடு தங்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை விட நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்கத் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
மக்களின் துயரங்களைப் போக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவற்றை நாசப்படுத்த வேண்டாம் என என்றும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி நிதி மோசடி - இரண்டு சந்தேகநபர்கள் கைது!
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு...
|
|
|


