அரசியலமைப்பு பேரவை விவகாரம் ; வாக்கெடுப்பு இன்று!
Wednesday, March 9th, 2016
இலங்கை நாடாளுமன்றை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் யோசனை குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இந்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த யோசனை குறித்த வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போதிலும் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்த யோசனை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளது.
இதன்படி நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனைத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளது.இந்த யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மஹிந்த தரப்பான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதா, இல்லையா என்பதனை இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி அறிவித்திருந்தது.
புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை ஆகியனவற்றை அறிமுகம் செய்யும் நோக்கில் நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


